Tuesday, February 28, 2012

ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம் "விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்." ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது" தலைவர் சொன்னார். "கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!
**
முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?
சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.
**
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா.. என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்...
**
ஒருவன் கடவுளிடம் : கடவுளே என்னோட பெண்டாட்டியை ஏன் ரொம்ப அழகா படைச்சிருக்கே?
கடவுள் : அப்போ தான் நீ அவமேலே அன்பா சந்தோஷமா இருப்பே.
அவன் : அதுசரி தான், அதே சமயம் அவளை ஏன் வடிகட்டின முட்டாளா படைச்சிருக்கே?
கடவுள் : அப்பதானே அவ உன் மேலே அன்பா இருப்பா...
**
வேலு: உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?
ஓட்டல் ஓனர்: நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.
**
"சுமாரா உங்க நாடகம் எத்தனை மணி நேரம் ஓடும்?" "ஒரு 2 மணி நேரம் ஒடும்!" "அப்ப 2 மணி நேரமும் சுமாராத்தான் இருக்கும்னு சொல்றீங்க!"
**
"உங்க மனைவிக்குப் பேச்சு வரலையேன்னு டாக்டர் கிட்ட கூப்பிட்டுப் போய் காண்பித்தாயா?" "ஆமாம். டாக்டரிடம் அப்படியே பேச்சு வராமலிருக்க தொடர்ந்து சிகிச்சை பண்ணச் சொன்னேன்."
**

Friday, February 24, 2006

நிருபர்: ஒரு படத்துக்கு என்ன வாங்கிறீங்க?
நடிகர்: சம்பளம் தான்...
நிருபர்: அதுதான் ... சம்பளமா என்ன வாங்கிறீங்க?
நடிகர்: பணம்தான்!..

Tuesday, February 21, 2006

பெரியவர்: இந்த பேரப்பிள்ளைகளை பார்த்தீர்களா.இந்த சின்ன வயதிலேயே சிம்ரன், ஜோதிகா எண்டு திரியுதுகள்..
மற்றவர்: ம்ம்ம்.... காலம் மாறிட்டுது... கலி காலம்...
பெரியவர்: என்ன இருந்தாலும் அசின் மாதிரி வருமா...
மற்றவர்: ???!!!

Sunday, February 19, 2006

வாயால நாய் எண்டு சொல்ல ஏலும்.... ஆனா நாயால வாய் எண்டு சொல்லமுடியாது....!!?

இரண்டு இருக்கைகளைக் கொண்ட இலகு ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளாகி ஒரு மயானத்தினுள் விழுந்து விட்டது.அந்த இடம் சர்தார்கள் வசிக்கும் இடம்.ஒரு சர்தார் உள்ளூர் செய்திச்சேவைக்கு தகவல் கொடுத்தார் ''விமானம் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சடலங்களை தேடுகிறோம். இதுவரை 300க்கு மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளோம். மேலும் தோண்டிக் கொண்டு இருக்கிறோம். மேலும் உடல்கள் மீட்கப்படலாம்''

Saturday, February 18, 2006

சர்தார் ஒருவர் புகைவண்டியில போனார். போனது sleeparate couchஇல். வீட்டுக்கு வந்து சொன்னார் ''சே.. வண்டியில கீழ் பெர்த் தான் கிடைத்தது. தூங்கவே முடியல எனக்கு''.
மனுசி கேட்டா ஏன் மேல இருந்தவரட்ட கேட்டு மாறி படுத்து இருக்கலாம் தானே எண்டு.
அதுக்கு அவர் சொன்னார் '' மேல தான் யாருமே இருக்கலயே. எப்பிடி கேக்கிறது?''

வணக்கம் வணக்கம் வணக்கம்